ADDED : ஏப் 02, 2025 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதுமக்கள் அவதி
கள்ளக்குறிச்சி அடுத்த ரோடு மாமாந்துார் கிராமத்திற்கென தனியாக இடுகாடு இல்லாததால் ஆற்றுப்பாலம் அருகே சாலையோரங்களில் உடல்களை எரித்து வருகின்றனர்.
-சீனிவாசன், கள்ளக்குறிச்சி.
விபத்து அபாயம்
நீலமங்கலம் கூட்ரோடு மேம்பாலத்திலிருந்து, ஏமப்பேர் சர்வீஸ் சாலை சந்திப்பு வரை தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் சென்டர் மீடியன்களை உடைத்து வாகன ஓட்டிகள் சாலைய கடக்கின்றனர்.
-ஆனந்தன், கள்ளக்குறிச்சி.
குப்பை பிரச்னை
கள்ளக்குறிச்சி துருகம் சாலை திருவரங்கம் நகர்-கருணாபுரம் சந்திப்பு பகுதியில் நகராட்சி விளையாட்டு மைதானம் பராமரிப்பின்றி குப்பைகள் சூழ்ந்து, மண் மேடுகளாக உள்ளது.
-காமராஜ், கள்ளக்குறிச்சி.

