தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /கள்ளக்குறிச்சி/புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி கள்ளக்குறிச்சி


ADDED : ஜூன் 12, 2025 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2025 01:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேசிய நெடுஞ்சாலையில் பள்ளம்


தியாகதுருகம் பொதுப்பணித்துறை அலுவலக சாலையில் உள்ள பெரிய பள்ளத்தால் விபத்து அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அச்சமடைந்து வருகின்றனர்.

-குமார், தியாகதுருகம்.

பயணிகள் நிழற்குடை தேவை


கள்ளக்குறிச்சி அடுத்த ரோடுமாமந்துார் பஸ் நிறுத்தத்தில், பயணிகள் நிழற்குடை இல்லாததால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உள்ளிட்டோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

-அருள், ரோடுமாமந்துார்.

கழிவு நீர் கலந்த மழை நீரால் அவதி


கள்ளக்குறிச்சி - துருகம் சாலையில், கழிவு நீர் கலந்த மழை நீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.

-பாபு, கள்ளக்குறிச்சி.

மின் விளக்குள் இல்லாததால் அச்சம்


கள்ளக்குறிச்சி - பெருவங்கூர் செல்லும் ஏரிக்கரை சாலையில் தெரு மின் விளக்குள் இல்லாததால் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர்.

-ராஜாராமன், பெருவங்கூர்.

குப்பையால் சுகாதார சீர்கேடு


கள்ளக்குறிச்சி தென்கீரனுார் ஏரியில் உபரி நீர் வெளியேறும் இடத்தில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

-பாஸ்கர், தென்கீரனுார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us