ஆக்கிரமிப்பு
திருக்கோவிலுார் கீழையூர் ஞானியர் மடத்தை சுற்றி இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமசாமி, கீழையூர்.
கழிவு நீர் பிரச்னை
திருக்கோவிலுார் பெரிய ஏரியில் சந்தைபேட்டை கழிவு நீர் வெளியேற்றுவதை தடுக்க வேண்டும்.
முருகேசன், சந்தைபேட்டை.
விபத்து அபாயம்
தச்சூர் பஸ் நிறுத்தம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் லாரி உள்ளிட்ட கனரக வானகங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
பிரசாந்த், தச்சூர்.
வாகன ஓட்டிகள் அவதி
உளுந்துார்பேட்டை அடுத்த எம்.குன்னத்துார்- கிளியூர் வயல்வெளி தார்சாலை கரடு முரடாக இருப்பதால் விளைபொருட்களை கொண்டு செல்லும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
அய்யாசாமி, குன்னத்துார்.
சாலை ஆக்கிரமிப்பு
கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சி - புதுபல்லகச்சேரி சாலையில் தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
சுப்ரமணியன், புதுபல்லகச்சேரி.
பயணிகள் நிழற்குடை தேவை
கள்ளக்குறிச்சி அடுத்த ரோடுமாமந்துார் பஸ் நிறுத்தத்தில், பயணிகள் நிழற்குடை இல்லாததால், மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அறிவழகன், ரோடுமாமந்துார்.