ADDED : மே 19, 2025 06:28 AM
ைஹமாஸ் விளக்கு சீரமைக்கப்படுமா?
தியாகதுருகம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள ைஹமாஸ் விளக்கு கடந்த சில மாதங்களாக எரியாமல் உள்ளது.
--ராஜ்குமார், தியாகதுருகம்.
குப்பையால் அவதி
கள்ளக்குறிச்சி அடுத்த ஏமப்பேர் பைபாஸ் சாலை சந்திப்பு அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
-ஹரிகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி.
பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?
கள்ளக்குறிச்சி அடுத்த ரோடுமாமந்துார் பஸ் நிறுத்தத்தில், நிழற்குடை இல்லாததால், பயணிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
-பாலாஜி, கள்ளக்குறிச்சி.
விபத்து அபாயம்
எலவனாசூர்கோட்டை பஸ் நிறுத்தத்தில் பெரிய அளவில் கட்டப்படும் டிஜிட்டல் பேனர்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர்.
-ராமன், எலவனாசூர்கோட்டை.
சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
எலவனாசூர்கோட்டை, பஸ் நிறுத்த பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகேசன், எலவனாசூர்கோட்டை.
குப்பையால் சுகாதார சீர்கேடு
உளுந்துார்பேட்டை - சேலம் சாலையில் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
-கணேசன், உளுந்துார்பேட்டை.
சுகாதார வளாகம் அமைக்கப்படுமா?
கள்ளக்குறிச்சி அடுத்த குருநாதபுரத்தில் பொது சுகாதார வளாகம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
-வேலன், குருநாதபுரம்.
படுமோசமான தார்சாலை
வாணாபுரம் அடுத்த மையனுாரில் இருந்து ஏகால் செல்லும் தார்ச்சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் படுமோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
-உதயகுமார், ஏகால்.
சாலையில் நெரிசல்
கள்ளக்குறிச்சி உழவர் சந்தை பகுதியில் வாகனங்கள் நிறுத்த இடமில்லாமல், சாலையிலேயே நிறுத்தப்படுவதால், அந்த வழியாக செல்வோர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
-கமலக்கண்ணன், கள்ளக்குறிச்சி.