தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /கள்ளக்குறிச்சி/ புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி கள்ளக்குறிச்சி


ADDED : மே 28, 2025 07:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2025 07:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஏரிக்கரை சேதம், நீர் கசிவு


கள்ளக்குறிச்சி பெரியேரிக்கரையை உடைத்து சாலை பணிகள் நடப்பதால், மழைக்காலங்களில் கரை வழியாக தண்ணீர் வழிந்தோடி சாலையில் தேங்குகிறது.

-காமராஜ், கள்ளக்குறிச்சி.

நான்கு வழிச்சாலை தேவை


கள்ளக்குறிச்சி அடுத்த அம்மன் நகரிலிருந்து காரனுார் கைகாட்டி வரை கச்சிராயபாளையம் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும்.

-அருணாசலம், கள்ளக்குறிச்சி.

வீட்டு வசதி வாரிய வீடுகள்


கள்ளக்குறிச்சி நகரில் ஏழைகளுக்கு தமிழக அரசு வீட்டு வசதி வாரியம் மூலம் வீடுகளை கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி.

பொதுக்கழிப்பிடம் ஏற்படுத்தப்படுமா?


கள்ளக்குறிச்சியில் பொது கழிப்பிட வசதி மிகவும் குறைவாக உள்ளதால், கூடுதல் எண்ணிக்கையில் கழிப்பிடங்களை ஏற்படுத்த வேண்டும்.

-அருண், கள்ளக்குறிச்சி.

பரவும் கரி துகள்கள்


கள்ளக்குறிச்சி நகர பகுதியில் அரிசி ஆலைகளின் மூலம் வெளியேறும் கரி துகள்கள் அதிகமாக உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

-சதீஷ், கள்ளக்குறிச்சி.

கோவிலை மறைத்து பேனர்


கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரில் கங்கையம்மன் கோவிலை மறைத்து பேனர் வைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முரளி, கள்ளக்குறிச்சி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us