சாலையில் வாகனங்கள் நிறுத்தம் கள்ளக்குறிச்சி காந்தி சாலையில் அரசு பெண்கள் பள்ளி முதல் கலெக்டர் அலுவலகம் வரை வரிசையாக வாகனங்கள்நிறுத்தப்படுவதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
-இளமுருகு அன்பரசன், கள்ளக்குறிச்சி. திடீர் பள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி மூங்கில்துறைப்பட்டில் தென்பெண்ணையாற்றின் பழைய பாலத்தின் முன்பு திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
-ரமேஷ், மூங்கில்துறைப்பட்டு. இடவசதி இல்லாத பஸ் நிலையம் சின்னசேலம் பஸ் நிலையத்தில் போதிய இடவசதி இல்லாததால் பஸ்களை பாதுகாப்பாக இயக்க முடியாமல் டிரைவர்கள் அவதிப்படுகின்றனர்.
-லட்சுமி வெங்கட்ராமன், சின்னசேலம். சாலையோர வாகனங்களால் அவதி மூங்கில்துறைப்பட்டு நான்கு முனை சந்திப்பில் சாலையோரம் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் போக்குவரத்து பாதிப்படைகிறது.
-ராஜா, மூங்கில்துறைப்பட்டு.