ADDED : ஏப் 28, 2026 04:14 AM

அ நிறம் | அளவு
ஸ்ரீ பெரும்புதுார் அருகே, வல்லம் - வடகால் சிப்காட் தொழிற்பூங்காவில் 150க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில், தெரேசாபுரம் சந்திப்பில் இருந்து செல்லும் இந்த சிப்காட் சாலை அங்காங்கே சேதமடைந்து பள்ளங்களாக மாறியுள்ளது.
இதனால், இவ்வழியாக இருசக்கர வாகனத்தில் தொழிற்சாலைகளுக்கு செல்லும் ஊழியர்கள், சேதமடைந்த சாலையில் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றர்.
எனவே, சிப்காட் நிர்வாகம் சேதமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சி.புருஷோத்தமன், ஸ்ரீபெரும்புதுார்.
