/புகார் பெட்டி /காஞ்சிபுரம்/காஞ்சிபுரம் புகார் பெட்டி: மின் கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகளால் விபத்து அபாயம்
காஞ்சிபுரம் புகார் பெட்டி: மின் கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகளால் விபத்து அபாயம்
காஞ்சிபுரம் புகார் பெட்டி: மின் கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகளால் விபத்து அபாயம்
ADDED : நவ 11, 2026 03:42 PM

அ நிறம் | அளவு
மின் கம்பத்தில் படர்ந்துள்ள
செடி, கொடிகளால் விபத்து அபாயம்
சாலவாக்கம் அடுத்த, கிளக்காடி கிராமத்தில், மின்வாரியம் சார்பில், வீடுகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், மயானத்திற்கு செல்லும் பாதை அருகில், அமைக்கப்பட்டுள்ள மின் கம்பத்தின் மீது செடி, கொடிகள் படர்ந்துள்ளன. இதனால், அவ்வழியாக செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, மின்கம்பத்தில், படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற, மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– கி. மணிகன்டன்,
கிளக்காடி.
