காஞ்சிபுரம் புகார் பெட்டி: சாலையோரம் மரக்கிளைகள் போடப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி
காஞ்சிபுரம் புகார் பெட்டி: சாலையோரம் மரக்கிளைகள் போடப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : நவ 11, 2026 04:38 PM

சாலையோரம் மரக்கிளைகள்
போடப்பட்டு உள்ளதால்
வாகன ஓட்டிகள் அவதி
காஞ்சிபுரம் விஜயகிராமணி சாலை வழியாக பொய்யாகுளம், ராஜாஜி மார்க்கெட், ரங்கசாமிகுளம் உள்ளிட்ட பகுதிக்கு பலர் வாகனங்களில் சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையோரம் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. மேலும், மின்வாரிய ஊழியர்கள் மூலம் மின் பாதைக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகள் வெட்டப்பட்டு சாலையோரம் போடப்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. மேலும், குப்பையில் வீசப்பட்ட உணவு கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, விஜயகிராமணி சாலையோரம் குவியலாக உள்ள குப்பை கழிவுகளையும், மரக்கிளைகளையும் அகற்ற மாநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– டி.சந்தானம்,
காஞ்சிபுரம்.
