ADDED : நவ 18, 2026 03:49 PM

ஓரிக்கையில் சுற்றித்திரியும் பன்றிகள்
சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை பகுதியில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் மற்றும் சாலைகள் அமைந்துள்ளன. இப்பகுதியில், 50க்கும் மேற்பட்ட பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. சாலையோரங்கள், குடியிருப்புகளை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் குப்பை கொட்டப்படும் இடங்களில் பன்றிகள் உணவு தேடி வருகின்றன.
இதனால், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள், பன்றிகள் குறுக்கே ஓடுவதால் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்வோர் திடீரென குறுக்கே வரும் பன்றிகளால் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
மேலும், பன்றிகள் குப்பையை கிளறி உணவு தேடுவதால், சாலைகளில் சிதறி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
பன்றிகள் மூலம் பரவக்கூடிய நோய் தொற்றுகள் குறித்த அச்சமும் குடியிருப்புவாசிகளிடம் நிலவுகிறது.
எனவே, ஓரிக்கை பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– என்.கல்யாணசுந்தரம்,
காஞ்சிபுரம்.
