/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
புகார் பெட்டி:தாலுகா அலுவலக கழிப்பறை பூட்டப்பட்டதால் அவஸ்தை
/
புகார் பெட்டி:தாலுகா அலுவலக கழிப்பறை பூட்டப்பட்டதால் அவஸ்தை
புகார் பெட்டி:தாலுகா அலுவலக கழிப்பறை பூட்டப்பட்டதால் அவஸ்தை
புகார் பெட்டி:தாலுகா அலுவலக கழிப்பறை பூட்டப்பட்டதால் அவஸ்தை
ADDED : ஜன 29, 2025 11:55 PM

தாலுகா அலுவலக கழிப்பறை பூட்டப்பட்டதால் அவஸ்தை
காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு வருவோரின் உபயோகத்திற்காக அமைக்கப்பட்டுள்ள கழிப்பறை, பயன்படுத்த முடியாத நிலையில் துர்நாற்றம் வீசியது. இதனால், கழிப்பறையை சுத்தம்செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதுகுறித்து நம் நாளிதழில், கடந்த 23ம் தேதி செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, கழிப்பறையை சீரமைக்க வேண்டிய தாலுகா அலுவலக நிர்வாகம், ஆண்கள் கழிப்பறைக்கு கயிற்றால் முடிச்சு போடப்பட்டும், பெண்கள் கழிப்பறைக்கு பூட்டும் போடப்பட்டுள்ளது.
இதனால், தாலுகா அலுவலகத்திற்கு வருவோர், இயற்கை உபாதை கழிக்க, கழிப்பறையை பயன்படுத்த முடியாத அவலநிலை உள்ளது. எனவே, பூட்டிக் கிடக்கும் கழிப்பறையை திறந்து சுத்தப்படுத்தி, பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர்.ரவிசங்கர், காஞ்சிபுரம். பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு காஞ்சியில் பயணியர் அவ தி
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதில், காமராஜர் வீதியில் உள்ள பேருந்து நிலைய நுழைவாயில் வளைவில் இருந்து, சென்னை கோயம்பேடு செல்லும் பேருந்துகள் நிற்கும் இடம் வரை, சாலையின் நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
மேலும், சாலையின் மையப்பகுதிவரை பூ, பழம் உள்ளிட்ட கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் காலை, மாலையில் மற்றும் பள்ளி, அலுவலக நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பயணியர் நடந்து செல்வதற்கும் இடையூறு ஏற்படுகிறது.
எனவே, பேருந்து நிலையத்தில் நடைபாதை மற்றும் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற மாநகராட்சியும், போலீசாரும் இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- கே.முனுசாமி, காஞ்சிபுரம். போக்குவரத்திற்கு இடையூறாக பாலத்தில் கட்டப்படும் மாடுகள்
உத்திரமேரூர் ஒன்றியம் திருவந்தவார் கிராமத்தில் இருந்து, ஆலப்பாக்கம் செல்லும் சாலையின் குறுக்கே உள்ள நீர்வரத்து கால்வாய் மீது பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை சுற்றுவட்டார கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதிவாசிகள்மாடுகளை பாலத்தில் கட்டி வருகின்றனர்.இதனால், அவ்வழியே செல்லும் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், பாலத்தில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் இல்லாததால், தனியார் தொழிற்சாலைகளில் பணி முடித்து, வீடு திரும்புவோர் எதிர்பாராதவிதமாக மாடுகளின் மீது மோதி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
எனவே, பாலத்தில் மாடுகள் கட்டுவதை தடுக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராஜராஜ சோழன், திருவந்தவார். குடியிருப்பு பகுதிகளில் சாலை மின் விளக்கு வசதி அமையுமா?
உத்திரமேரூர் பேரூராட்சியில், 27,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீரராகவா குடியிருப்பு பகுதியில், கடந்த 15 ஆண்டுகளாக சாலை மற்றும் மின் விளக்கு வசதி இல்லாமல் உள்ளது.
மேலும், சாலை வசதி இல்லாததால், மழைநேரங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்குவதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது.
எனவே, இப்பகுதியில் சாலை மற்றும்மின்விளக்கு வசதியை ஏற்படுத்த,பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

