
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாய்ந்துள்ள மின் கம்பங்கள் சீரமைக்கப்படுமா?
உ த்திரமேரூரில் இருந்து காக்கநல்லுார் செல்லும் சாலையோரத்தில் மின் கம்பங்கள் நடப்பட்டு, விவசாய பம்ப் செட்டுகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இங்குள்ள இரண்டு மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. இதனால், மழை மற்றும் காற்று வீசும் நேரங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, சாய்ந்திருக்கும் மின் கம்பங்களை, மின் வாரியத் துறையினர் சீரமைக்க வேண்டும்.
-- எம். வீரராகவராஜ், உத்திரமேரூர்.