/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; பராமரிப்பு இல்லாத திறந்தநிலை கிணறால் ஆபத்து

ADDED : ஜூன் 12, 2025 02:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பராமரிப்பு இல்லாத திறந்தநிலை கிணறால் ஆபத்து
உத்திரமேரூர் ஒன்றியம், மானாம்பதி கண்டிகை, பெரிய தெருவில் திறந்த நிலை கிணறு உள்ளது. இந்த கிணற்று நீரை அப்பகுதியினர் குடிநீராக பயன்படுத்தி வந்தனர்.
சில ஆண்டுக்கு முன் தண்ணீர் வற்றியதால், கிணறு பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் திறந்த நிலை கிணற்றின் அருகே, அடிக்கடி விளையாடி வருகின்றனர்.
கிணறு திறந்த நிலையில் இருப்பதால், சிறுவர்கள் கிணற்றில் விழுந்து விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. இதை தவிர்க்க, திறந்த நிலை கிணற்றின் மீது இரும்பு கம்பி வலை அமைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.