/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்.: புகார் பெட்டி; மின்கம்பியில் உரசும் மரக்கிளை தீப்பொறி பறப்பதால் அச்சம்

ADDED : ஜூலை 02, 2025 10:23 PM

மின்கம்பியில் உரசும் மரக்கிளை தீப்பொறி பறப்பதால் அச்சம்
காஞ்சிபுரம் அடுத்த முசரவாக்கத்தில் இருந்து பாலுசெட்டிசத்திரம் செல்லும் சாலையோரம் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், இரு மின்கம்பங்களுக்கு இடையேயான மின்கம்பிகளை சாலையோரம் உள்ள சீமைகருவேல மரக்கிளை உரசுகின்றன. இதனால், பலத்த காற்றுடன் மழை பெய்யும்போது மின்கம்பி உரசி தீப்பொறி பறக்கிறது. இதனால், இவ்வழியாக செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
மேலும், மின் தடையும் ஏற்படுகிறது. எனவே, முசரவாக்கம் சாலையில், மின்ஒயரில் உரசும் சீமை கருவேல மரக்கிளையை மின்வாரிய அதிகாரிகள் அகற்ற வேண்டும்.
-- கே.ராமச்சந்திரன், கீழ்கதிர்பூர்.