/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி;சேதமடைந்த மின்கம்பம் புதிதாக அமைக்க கோரிக்கை
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி;சேதமடைந்த மின்கம்பம் புதிதாக அமைக்க கோரிக்கை
காஞ்சிபுரம்: புகார் பெட்டி;சேதமடைந்த மின்கம்பம் புதிதாக அமைக்க கோரிக்கை
காஞ்சிபுரம்: புகார் பெட்டி;சேதமடைந்த மின்கம்பம் புதிதாக அமைக்க கோரிக்கை
ADDED : பிப் 06, 2025 01:08 AM

சேதமடைந்த மின்கம்பம் புதிதாக அமைக்க கோரிக்கை
வாலாஜாபாத் ஒன்றியம் வையாவூர் ஊராட்சி, பாரதி நகர், மாரியம்மன் கோவில் தெருவில், வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஒரு மின்கம்பத்தில் கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன.
மேலும், பலத்த காற்றடித்தால், மின்கம்பம் சாய்ந்து விழுந்து, மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- என்.குமார், வையாவூர்.
கால்நடை குடிநீர் தொட்டி பராமரிக்க எதிர்பார்ப்பு
வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது புளியம்பாக்கம் கிராமம். இங்கு, ஊரக வளர்ச்சித் துறை சார்பில், உரக்கிடங்கு அருகே கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்த துவக்கத்தில், இந்த தொட்டியில் தண்ணீர் நிரப்பி பராமரிக்கப்பட்டது. இதனால், இப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்று வரும் கால்நடைகளுக்கு பயனுள்ளதாக இருந்தது.
கடந்த சில ஆண்டுகளாக முறையாக பரமரிப்பின்றி, தண்ணீர் நிரப்பாமல் வீணாகி வருகிறது. விரைவில் கோடைக்காலம் வரவுள்ளதால், கால்நடைகளுக்கான இந்த குடிநீர் தொட்டியை பராமரித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிவராமன், புளியம்பாக்கம்.
சாலையோர பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்
மப்பேடு -- வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், சுங்குவார்சத்திரம் அடுத்த சிறுமாங்காடில் இருந்து பிரிந்து, வல்லம் -- வடகால் சிப்காட் தொழிற்சாலைக்கு செல்லும் இணைப்பு சாலை வழியாக, தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையில், சிறுமாங்காடு அருகே உள்ள வளைவில், சாலையோரம் மண் அரிப்பால் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இரவில் பணி முடிந்து வீடு திரும்பும் இருசக்கர வாகன ஓட்டிகள், எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது.
அதேபோல், எதிரே வரும் கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும் போது, இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரம் உள்ள பள்ளத்தில் மண் கொட்டி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.