/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் : புகார் பெட்டி; பாதாள சாக்கடை மூடியை மாற்ற கோரிக்கை
/
காஞ்சிபுரம் : புகார் பெட்டி; பாதாள சாக்கடை மூடியை மாற்ற கோரிக்கை
காஞ்சிபுரம் : புகார் பெட்டி; பாதாள சாக்கடை மூடியை மாற்ற கோரிக்கை
காஞ்சிபுரம் : புகார் பெட்டி; பாதாள சாக்கடை மூடியை மாற்ற கோரிக்கை
ADDED : நவ 05, 2025 09:38 PM

பாதாள சாக்கடை மூடி மாற்றப்படுமா? கா ஞ்சிபுரம், பெரியார் நகரில் இருந்து, செவிலிமேடு மும்முனை சாலை சந்திப்பு வரையுள்ள ஓரிக்கை மிலிட்டரி சாலை, புறவழிசாலையாக உள்ளது.
கனரக வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில் ஏற்படும் நெரிசலை தவிர்க்கும் வகையில், சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, மழைநீர் வடிகால்வாயின் மீது நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஓரிக்கை திருவேங்கடம் தனியார் திருமண மண்டபம் அருகில், நடைபாதையில் உள்ள பாதாள சாக்கடை மூடி உடைந்த நிலையில் உள்ளது. இதனால், நடைபாதையில் நடந்து செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, உடைந்த நிலையில் உள்ள பாதாள சாக்கடை மூடியை மாற்றி, புதிதாக அமைக்க வேண்டும்.
- என்.ராஜேந்திரன், காஞ்சிபுரம்.