/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் : புகார் பெட்டி ; சாலை விரிவுபடுத்தியும் அகற்றாத மின்கம்பத்தால் இடையூறு

ADDED : ஏப் 17, 2025 12:34 AM

சாலை விரிவுபடுத்தியும் அகற்றாத மின்கம்பத்தால் இடையூறு
காஞ்சிபுரம் அடுத்த, நாயக்கன்பேட்டை, பெரிய தெருவில் மின் கம்பம் உள்ளது. இது, கான்கிரீட் சாலையை விரிவுபடுத்தும் போது, வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, சாலையின் நடுவே மின் கம்பம் அமைந்துவிட்டது.
இந்த இடையூறாக இருக்கும் மின் கம்பத்தால், லோடு வாகனங்கள் மற்றும் விழாக் காலங்களில் சுவாமி வீதியுலா வாகனங்கள் செல்ல முடியவில்லை.
மேலும், இரும்பிலான மின் கம்பங்கள் இருக்கும் இடங்களில் கான்கிரீட் மின் கம்பங்களை மாற்றி அமைக்க மின் வாரியம் உறுதியளித்தது.
இதுவரையில், நாயக்கன்பேட்டை பெரிய தெருவில் இரும்பிலான மின் கம்பத்தை அகற்றவில்லை. எனவே, இரும்பிலான மின் கம்பங்களை அகற்றி, மின் விபத்து தவிர்க்க சம்பந்தப்பட்ட மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -கே. குமார்,
நாயக்கன்பேட்டை.