/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; பராமரிப்பின்றி கழிவுநீர் கால்வாய்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; பராமரிப்பின்றி கழிவுநீர் கால்வாய்
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; பராமரிப்பின்றி கழிவுநீர் கால்வாய்
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; பராமரிப்பின்றி கழிவுநீர் கால்வாய்
ADDED : ஏப் 24, 2025 01:25 AM

பராமரிப்பின்றி கழிவுநீர் கால்வாய்
வாலாஜாபாத் ஒன்றியம், வாரணவாசி ஊராட்சிக்கு உட்பட்டது ஆம்பாக்கம் கிராமம். இக்கிராமத்தில், பெருந்தேவியம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கழிவுநீர் கால்வாய் முறையான பராமரிப்பின்றி, சில நாட்களாக சரி,வர கழிவுநீர் வெளியேறாமல் அடைப்புகள் அதிகமாகி காணப்படுகிறது. இதனால், கொசு உற்பத்தி அதிகரிப்பு மற்றும் துர்நாற்றம் போன்றவையால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
மேலும், தெரு பகுதியும் சீராக இல்லாமல் செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன.
எனவே, ஆம்பாக்கம் பெருந்தேவியம்மன் கோவில் தெரு கழிவுநீர் கால்வாயில், அடைப்புகளை சரி செய்து, தெருவை பராமரித்திட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ். விஜய்,
ஆம்பாக்கம்.