/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சேதமடைந்த சாலை சீரமைப்பது எப்போது?
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சேதமடைந்த சாலை சீரமைப்பது எப்போது?
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சேதமடைந்த சாலை சீரமைப்பது எப்போது?
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சேதமடைந்த சாலை சீரமைப்பது எப்போது?
ADDED : பிப் 27, 2025 12:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேதமடைந்த சாலை சீரமைப்பது எப்போது?
வாலாஜாபாத் ஒன்றியம் சிங்காடிவாக்கம் பிரதான சாலை வழியாக சிறுவேடல், தென்னேரி, மருதம், ஏனாத்துார், வையாவூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு, தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், ஜல்லி கற்கள் பெயர்ந்து, ஆங்காங்கே சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லி கற்களால், இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சரசாகின்றன.
இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்த சாலையை பேட்ச் ஒர்க் பணியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.குமார், ஏனாத்துார்.