/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மழைநீர் வடிகால்வாய்துார்வாரி சீரமைக்கப்படுமா?

ADDED : ஜூலை 16, 2025 09:37 PM

மழைநீர் வடிகால்வாய்துார்வாரி சீரமைக்கப்படுமா?
காஞ்சிபுரம் காந்தி சாலையில் மழைநீர் வெளியேறும் வகையில், சாலையின் இருபுறமும் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மழைநீர் மட்டுமே செல்ல வேண்டிய இக்கால்வாயில் உணவகம், டீக்கடை, வணிக நிறுவனங்களின் கழிவுநீர் முறைகேடாக மழைநீர் வடிகால்வாயில் விடப்படுகிறது.
இதனால், கழிவுகள் குவியலாக உள்ளதால், கால்வாயில் அடைப்பு ஏற்படுகிறது. மழை பெய்யும்போது குறிப்பாக கன்னியம்மன் கோவில் அருகில் உள்ள மேன்ஹோல் வழியாக கழிவுநீருடன் கலந்த மழைநீர் வெளியேறுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
எனவே, மழைநீர் கால்வாயில் அடைபட்டிருக்கும் கழிவுகளை அகற்றுவதோடு, முறைகேடான கழிவுநீர் இணைப்புகளை துண்டிக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பி.இந்திரன், காஞ்சிபுரம்.