ADDED : ஏப் 28, 2026 04:11 AM

அ நிறம் | அளவு
மாட்டுத்தொழுவமாக மாறி ஆக்கிரமிப்பில் சிக்கிய கை பம்ப்
காஞ்சிபுரம் அடுத்த, மேட்டுப்பரந்துார் கிராமத்தில் மின் சப்ளை இல்லாத நேரங்களில், கை பம்ப் பயன்படுத்தி தண்ணீரை எடுக்கும் நோக்கத்திற்கு போடப்பட்டுள்ளது.
குறிப்பாக, மேட்டுப்பரந்துார் கிராமத்தில் போடப்பட்ட கை பம்ப் கட்டமைப்பு, மாட்டுத் தொழுவமாக மாறி ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால், மின் சப்ளை இல்லாத நேரங்களில் கை பம்பில் தண்ணீர் இறைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், மேட்டுப்பரந்துாரில் ஆக்கிரமிப்பில் சிக்கியிருக்கும் கை பம்பை மீட்டு, பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
- சு.நடராஜன், காஞ்சிபுரம்.
