சாய்ந்த நிலையில் மின்கம்பம் சரி செய்ய வேண்டுகோள்
சாய்ந்த நிலையில் மின்கம்பம் சரி செய்ய வேண்டுகோள்
ADDED : ஏப் 02, 2026 05:40 AM

அ நிறம் | அளவு
காஞ்சிபுரம் ஒன்றியம், வளத்தோட்டம் கிராமத்தில் இருந்து, புஞ்சையரசந்தாங்கல் கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் விவசாய நிலங்கள் உள்ளன.
இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கும், வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்க சாலையோரத்தில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதில், ஒரு மின்கம்பத்திற்கு நிலத்தடியில் போதுமான பிடிப்பு இல்லாததால், சாய்ந்த நிலையில் உள்ளது.
நாளுக்கு நாள், இந்த மின்கம்பம் சாய்ந்து வருவதால், எப்போது முற்றிலும் சாய்ந்து விழுமோ என, இச் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளும், வயல்வெளிக்கு செல்லும் விவசாயிகளும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.முனுசாமி, புஞ்சையரசந்தாங்கல்.
