விபத்தை தவிர்க்க சாலையோரம் தடுப்பு அமைக்க வேண்டும்
விபத்தை தவிர்க்க சாலையோரம் தடுப்பு அமைக்க வேண்டும்
ADDED : பிப் 05, 2026 06:57 AM

அ நிறம் | அளவு
கா ஞ்சிபுரம் ஒன்றியம், கீழம்பியில் இருந்து, கூத்திர மேடு, மேல் ஒட்டிவாக்கம் செல்லும் சாலையோரத்தின் இருபுறமும் விவசாய நிலங்கள் உள்ளன. இதில், விவசாய நிலங்கள் பள்ளமான பகுதியில் சில இடங்களில் ஒரு பக்கம் தடுப்பு அமைக்கப்படாமல் உள்ளது.
இதனால், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, சாலையோரம் பள்ளம் உள்ள பகுதியில் விடுபட்ட இடங்களில் தடுப்பு அமைக்க நெடுஞ் சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வி.வரதராஜன், காஞ்சிபுரம்.
