/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் வடிகால்வாய் துார்வாரி சீரமைக்கப்படுமா?
/
மழைநீர் வடிகால்வாய் துார்வாரி சீரமைக்கப்படுமா?
UPDATED : செப் 04, 2025 08:45 AM
ADDED : செப் 04, 2025 02:59 AM

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாயார் குளம் சாலையில், மழைநீர் வெளியேறும் வகையில், சாலையோரம் கான்கிரீட் வடிகால்வாய் கட்டப்பட்டுள்ளது. முறையான பராமரிப்பு இல்லாதததால், 3 அடி ஆழமுள்ள கான்கிரீட் கால்வாய் மண் திட்டுகளாலும், செடிகளாலும் துார்ந்த நிலையில் உள்ளது.
அதனால், பலத்த மழை பெய்தால், கால்வாய் வழியாக செல்ல வேண்டிய மழைநீர், அப்பகுதியில் உள்ள வீடு, கடைகளுக்குள் புகுந்து விடும் நிலை உள்ளது.
எனவே, தாயார் குளம் தெருவில் மண் திட்டுகளாலும், செடிகளாலும் துார்ந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஏ.சிவகுமார், காஞ்சிபுரம்.