/
புகார் பெட்டி
/
திருவள்ளூர்
/
புகார் பெட்டி கான்கிரீட் பெயர்ந்த மின்கம்பம்
/
புகார் பெட்டி கான்கிரீட் பெயர்ந்த மின்கம்பம்
ADDED : பிப் 11, 2025 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்தூர் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சியில் அமைந்துள்ளது மணவாள நகர்.
இப்பகுதியில், கபிலர் நகர், அழகிரி தெரு பிரதான சாலையில் கண்ணகி தெரு, அம்மன் தெரு சாலை சந்திப்பில், கால்வாயின் நடுவில் உள்ள மின்கம்பம் ஒன்று, கான்கிரீட் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது.
கபிலர் நகர் நற்பணி மன்றம் சார்பில் பல புகார் கொடுத்தும் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை,
சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பகுதிவாசிகள்,
மணவாள நகர்.

