புகார் பெட்டி: சாய்ந்து நிற்கும் சிக்னல் கம்பத்தால் விபத்து அபாயம்
புகார் பெட்டி: சாய்ந்து நிற்கும் சிக்னல் கம்பத்தால் விபத்து அபாயம்
ADDED : மே 28, 2026 06:37 AM

சாய்ந்து நிற்கும் சிக்னல் கம்பத்தால் விபத்து அபாயம்
சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த துராபள்ளம் பகுதியில் உள்ள சுண்ணாம்புகுளம் சாலை சந்திப்பில், இணைப்பு சாலைக்கான 'டிவைடர்' உள்ளது.
எப்போதும், அப் பகுதி வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். விபத்து அபாய பகுதி என்பதால், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை எச்சரிக்கை செய்யும் விதமாக, ஒளிரும் மஞ்சள் நிற விளக்கு சிக்னல் கம்பம் ஒன்று உள்ளது.
சில தினங்களுக்கு முன், வாகனம் ஒன்று மோதியதில், அந்த கம்பம் சாய்ந்தது. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் பார்வைக்கு, அந்த மஞ்சள் நிற விளக்கு தெரியவில்லை. அதனால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம், உடனடியாக அந்த சிக்னல் கம்பத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அ.பாஸ்கர்,
சுண்ணாம்புகுளம்.
