/
புகார் பெட்டி
/
திருவள்ளூர்
/
புகார் பெட்டிபழுதடைந்த குடிநீர் தொட்டியை இடிக்க வேண்டும்
/
புகார் பெட்டிபழுதடைந்த குடிநீர் தொட்டியை இடிக்க வேண்டும்
புகார் பெட்டிபழுதடைந்த குடிநீர் தொட்டியை இடிக்க வேண்டும்
புகார் பெட்டிபழுதடைந்த குடிநீர் தொட்டியை இடிக்க வேண்டும்
ADDED : ஜன 23, 2025 12:56 AM

பழுதடைந்த குடிநீர் தொட்டியை இடிக்க வேண்டும்
திருத்தணி ஒன்றியம், வி.கே.ஆர்.புரம் ஊராட்சி, பொந்தாலகண்டிகை கிராமத்தில், 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, பழுதடைந்த குடிநீர் தொட்டியின் வாயிலாக சில ஆண்டுகளாக தெருக்குழாய் மற்றும் வீட்டு குழாய்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
தொட்டியின் மேற்பகுதி முழுதும் சேதமடைந்துள்ளதால், குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யாமல் குடிநீர் வினியோகம் செய்வதால், பொதுமக்கள் நோய் பரவும் அபாயத்தில் உள்ளனர். அப்பகுதியினர், பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்றி, புதியதாக கட்டியுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் வாயிலாக தண்ணீர் ஏற்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்றனர்.
எனவே பழுதடைந்த குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும்.
- பி. சந்திரன், பொந்தலாகண்டிகை.