திருவள்ளூர்: புகார் பெட்டி; தெரு விளக்கின்றி குடியிருப்புவாசிகள் அவதி
திருவள்ளூர்: புகார் பெட்டி; தெரு விளக்கின்றி குடியிருப்புவாசிகள் அவதி
ADDED : பிப் 20, 2025 01:18 AM

அ நிறம் | அளவு
தெரு விளக்கின்றி குடியிருப்புவாசிகள் அவதி
திருமழிசை பேரூராட்சி 5வது வார்டுக்குட்பட்ட பகுதி விக்னேஷ்வரா நகர். இப்பகுதியில் தனியார் பொறியியல் கல்லுாரி மற்றும் பள்ளிக்கூடம் உள்ளது. 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கொண்டு இப்பகுதியில் தெரு விளக்குகள் இல்லாததால் இருளில் மூழ்கி கிடக்கிறது.
இதனால் இரவு நேரங்களில் பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருவதோடு அச்சத்தோடு சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் 5வது வார்டுக்குட்பட்ட பகுதியில், தெரு விளக்குகள் அமைக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாரியப்பன்,
திருமழிசை.
