/
புகார் பெட்டி
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர்: புகார் பெட்டி; ஏ.டி.எம்., மையம் திறக்க வேண்டும்
/
திருவள்ளூர்: புகார் பெட்டி; ஏ.டி.எம்., மையம் திறக்க வேண்டும்
திருவள்ளூர்: புகார் பெட்டி; ஏ.டி.எம்., மையம் திறக்க வேண்டும்
திருவள்ளூர்: புகார் பெட்டி; ஏ.டி.எம்., மையம் திறக்க வேண்டும்
ADDED : ஜூலை 31, 2025 12:44 AM
சாமிரெட்டி கண்டிகையில் ஏ.டி.எம்., மையம் வேண்டும் கு ம்மிடிப்பூண்டி நகரை ஒட்டி, பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட சாமிரெட்டிகண்டிகை பகுதி உள்ளது. பெரியார் நகர், பூபால் நகர், முனுசாமி நகர் உட்பட 20க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் அங்கு உள்ளன.
பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு வசித்து வருகின்றனர். அவரச தேவைக்கு பணம் எடுக்க வேண்டும் என்றால், 3 கி.மீ., தொலைவில் உள்ள கும்மிடிப்பூண்டி பஜார் பகுதிக்கு செல்ல வேண்டும். பகுதி மக்கள் நலன் கருதி, சாமிரெட்டிகண்டிகையின் மையப் பகுதியான பெரியார் நகர் சந்திப்பில், ஏ.டி.எம்., மையம் திறக்க வேண்டும்.
- டி.எம்.செந்தில்குமார், கும்மிடிப்பூண்டி.