/
புகார் பெட்டி
/
திருவள்ளூர்
/
புகார் பெட்டி சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு திறக்கப்படுமா?
/
புகார் பெட்டி சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு திறக்கப்படுமா?
புகார் பெட்டி சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு திறக்கப்படுமா?
புகார் பெட்டி சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு திறக்கப்படுமா?
ADDED : ஆக 04, 2025 11:06 PM
திருத்தணி ஒன்றியம் வேலஞ்சேரி காலனியில், மகளிர் சுகாதார வளாகம், கடந்த ஆறு ஆண்டுகளாக உள்ளது. இந்த வளாகம், பராமரிப்பின்றி இருந்தது.
இதையடுத்து, கடந்த மாதம், ஊராட்சி நிர்வாகம் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் சுகாதார வளாகத்தை சீரமைத்து, தற்போது தயார் நிலையில் உள்ளது.
ஆனால், சுகாதார வளாகத்திற்கு பூட்டு போட்டு, பயன்பாட்டிற்கு விடாமல் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. இதனால், அப்பகுதி மகளிர் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, தயார் நிலையில் உள்ள சுகாதார வளாகத்தை திறந்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
- எஸ்.செல்வம், வேலஞ்சேரி.