/
புகார் பெட்டி
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர்: புகார் பெட்டி; சுரங்கப்பாதையில் தேங்கும் தண்ணீர் அகற்றப்படுமா?

ADDED : பிப் 20, 2025 01:08 AM

சுரங்கப்பாதையில் தேங்கும் தண்ணீர் அகற்றப்படுமா?
திருத்தணி - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, முருக்கம்பட்டு ரயில்வே கேட் அருகே சுரங்கப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியாக, மேல்முருக்கம்பட்டு, மங்காபுரம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், ரயில்வே சுரங்கப்பாதையில் அருகே விவசாயிகள் நெல், காய்கறி போன்ற பயிர்கள் செய்து அதற்கு தண்ணீர் பாய்ச்சும் போது, நிலத்தடி நீர், ரயில்வே சுரங்கப்பாதையில் ஊறி, வந்து விடுகிறது.
இதனால் அடிக்கடி சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி விடுகிறது. எனவே, சுரங்கப்பாதையில் தேங்கும் தண்ணீரை அகற்ற வேண்டுகிறேன்.
- எஸ்.ரவி,
முருக்கம்ப்பட்டு.