ADDED : நவ 16, 2026 06:49 PM

வீணாகும் தண்ணீர்
திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், ராஜகணபதி கோவில் முன்புறம் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.
– செல்வராஜ், தென்னம்பாளையம். (படம் உண்டு)
திருப்பூர், பாளையக்காடு, சேர்மன் கந்தசாமி நகர் ஸ்கூல் வீதியில் குழாய் உடைந்து ஒரு மாதமாக தண்ணீர் வீணாாகிறது.
– சின்னமருது, சேர்மன்கந்தசாமிநகர். (படம் உண்டு)
கும்மிருட்டில் சாலை
வளம் பாலம் துவங்கி மணியகாரம்பாளையம் வரை நொய்யல் சாலையில் விளக்குகள் எதுவும் எரிவதில்லை.
– அண்ணாதுரை, மணியாகரம்பாளையம். (படம் உண்டு)
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி. மில் ஸ்டாப்பில் இருந்து மண்ணரை வரை தெருவிளக்குகள் எரிவதில்லை.
– விஸ்வேஸ்வரன், மண்ணரை. (படம் உண்டு)
போலீசார் கவனத்துக்கு...
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன் சிக்னல் வேலை செய்வதில்லை.
– வித்யசாகர், பெரிச்சிபாளையம். (படம் உண்டு)
கொசுத்தொல்லை
திருப்பூர் மாநகராட்சி வெள்ளி பூங்காவில் தேங்கும் மழைநீரை அவ்வப்போது வெளியேற்றி துாய்மைப்படுத்த வேண்டும்.
– தங்கராஜ், பார்க்ரோடு. (படம் உண்டு)
ஊத்துக்குளி – காங்கயம் மெயின் ரோட்டில் கால்வாய் சுற்றிலும் முட்புதர் நிறைந்துள்ளதால், கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.
– ரமேஷ், ஊத்துக்குளி. (படம் உண்டு)
