ADDED : நவ 17, 2026 03:18 AM

அ நிறம் | அளவு
திருப்போரூர் ஒன்றியம், தையூர் – படூர் ஆறுவழிச்சாலை இடையே உள்ள கேளம்பாக்கத்தில் சீமைக் கருவேல முட்செடிகள் காடுபோல் வளர்ந்துள்ளன. இந்த முட்செடிகள் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது உரசி கண்களை பதம் பார்க்கின்றன. மேலும், விபத்து ஏற்படும் சூழலும் உள்ளது. எனவே, நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்து, சாலையோரம் வளர்ந்துள்ள சீமைக்கருவேல முட் செடிகளை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.சம்பத், கேளம்பாக்கம்.
