/
புகார் பெட்டி
/
திருப்பூர்
/
சாக்கடையில் பாய்ந்த சாயக்கழிவு நீர்
/
சாக்கடையில் பாய்ந்த சாயக்கழிவு நீர்
ADDED : ஜூலை 07, 2025 12:21 AM

கால்வாய் அடைப்பு
திருப்பூர், 55வது வார்டு, தெய்வானையம்மாள் லே- அவுட்டில், கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற வழியின்றி துர்நாற்றம் வீசுகிறது.
- கோமதி, தெய்வானையம்மாள் லே-அவுட். (படம் உண்டு)
ஊத்துக்குளி ரோடு, மண்ணரை செல்லபுரத்தில் கால்வாயில் குப்பைகள் தேங்கியுள்ளன. சுத்தம் செய்ய வேண்டும்.
- அழகப்பன், மண்ணரை. (படம் உண்டு)
இது தவறல்லவா?
ராயபுரம், சூசையாபுரம் மெயின் ரோட்டில் சாக்கடையில் சாயக்கழிவுநீர் திறந்து விடப்படுகிறது. மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணித்து விதி மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- பாண்டியன், சூசையாபுரம். (படம் உண்டு)
குப்பைக்கு தீ
முதலிபாளையம், பார்வதி புரம், ஈடன் பார்க் பகுதியில் ரோட்டோரம் கொட்டப்படும் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுகிறது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குப்பைகளை அள்ள வேண்டும்.
- ரவிசெல்வம், முதலிபாளையம். (படம் உண்டு)
வீணாகும் தண்ணீர்
திருப்பூர் கோர்ட் வீதி - டி.எஸ்., புரம் வழியில் குழாய் உடைந்து தண்ணீர், 24 மணி நேரமும் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- இளையராஜா, டி.எஸ்., புரம். (படம் உண்டு)
சாலையில் கழிவுநீர்திருப்பூர், அம்மன் நகர், தாய்த்தமிழ் பள்ளி வீதியில் முறையான கால்வாய் வசதி இல்லை. கழிவுநீர் அப்படியே சாலையில் திறந்து விடப்படுகிறது.
- கோகுல்ராஜ், அம்மன் நகர். (படம் உண்டு)
நல்லுார், ராக்கியாபாளையம், சேரன் நகர் பட்டத்தரசியம்மன் கோவில் வீதியில் கழிவுநீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும்.
- ராஜேந்திரன், சேரன் நகர். (படம் உண்டு)
சாலையில் குழி
திருப்பூர் செல்லம்மாள் காலனி, ஜீவா வீதி மேற்கு மற்றும் கிழக்கு ரோடு சேதமாகி, குழியாக உள்ளது. வளைவில் திரும்பும் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். குழியை மூட வேண்டும்.
- ரவிக்குமார், செல்லம்மாள் காலனி. (படம் உண்டு)
திருப்பூர், பல்லடம் ரோடு, தமிழ்நாடு தியேட்டர் ஸ்டாப்பில் இருந்து கருப்ப கவுண்டம்பாளையம் செல்லும் ரோடு வளைவில் குழியாக உள்ளது. வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். குழியை மூடி ரோடு அமைக்க வேண்டும்.
- செல்வராஜ், கருப்பகவுண்டம்பாளையம். (படம் உண்டு)
சூழும் கும்மிருட்டு
செங்கப்பள்ளி பைபாஸ் பாலத்தின் கீழ் தெருவிளக்கு பொருத்த வேண்டும். மின்கம்பங்கள் இருந்து விளக்கு பொருத்தாமல் இருப்பதால், கும்மிருட்டாக உள்ளது. பஸ்சுக்கு காத்திருப்போர் அச்சம் கொள்கின்றனர்.
- கார்த்திக், செங்கப்பள்ளி. (படம் உண்டு)
ரியாக் ஷன்
குப்பைகள் மாயம்
திருப்பூர், காலேஜ் ரோடு, ஹவுசிங் யூனிட் பஸ் ஸ்டாப் அருகே குப்பை தேங்கியிருப்பதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. மாநகராட்சி நிர்வாகத்தினர் குப்பைகளை அள்ளி விட்டனர்.
- கார்த்திகேயன், காலேஜ் ரோடு. (படம் உண்டு)
பணி துவக்கம்வீரபாண்டி, 54வது வார்டு, நொச்சிபாளையம் பிரிவு - திருவள்ளுவர் நகர் ரோடு மோசமாக இருந்தது. செய்தி வெளியானதும் ரோடு பணி துவங்க பூமி பூஜை போடப்பட்டுள்ளது.
- முத்துக்குமாரசாமி, நொச்சிபாளையம்.
சாய்ந்தது நிமிர்ந்ததுதிருப்பூர், 48வது வார்டு, பத்மினி கார்டன் முதல் வீதியில் மின்கம்பம் சாய்ந்த நிலையில் இருந்தது. செய்தி வெளியானதும், மின்கம்பம் சரிசெய்யப்பட்டது.
- ராஜேந்திரன், பத்மினி கார்டன். (படம் உண்டு)
சீரானது உடைப்பு
திருப்பூர், பல்லடம் ரோடு, சந்தைப்பேட்டை முன் குழாய் உடைந்து தண்ணீர் வீணானதாக செய்தி வெளியிடப்பட்டது. குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டுள்ளது.
- செல்வராஜ், பல்லடம் ரோடு. (படம் உண்டு)
தெருவிளக்கு பளிச்
திருப்பூர் வீரபாண்டி நால்ரோடு சிக்னல் சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு எரிவதில்லை என செய்தி வெளியானது. விளக்குகள் சரிசெய்யப்பட்டு, தற்போது பளிச்சிடுகிறது.
- செல்வம், வீரபாண்டி பிரிவு. (படம் உண்டு)