/
புகார் பெட்டி
/
திருப்பூர்
/
பச்சை மரங்கள் வெட்டி சாய்ப்பு; பட்டுப்போனதோ பயமுறுத்துது
/
பச்சை மரங்கள் வெட்டி சாய்ப்பு; பட்டுப்போனதோ பயமுறுத்துது
பச்சை மரங்கள் வெட்டி சாய்ப்பு; பட்டுப்போனதோ பயமுறுத்துது
பச்சை மரங்கள் வெட்டி சாய்ப்பு; பட்டுப்போனதோ பயமுறுத்துது
ADDED : செப் 29, 2025 12:18 AM

ஒளிராத விளக்கு
நல்லாத்துப்பாளையத்தில் மின் கோபுர விளக்கு பழுதாகி விட்டது. இரவு நேரத்தில் வாகன போக்குவரத்துக்கு வெளிச்சம் இல்லாத காரணத்தால், மக்கள் சிரமப்படுகின்றனர்.
- உதயகுமார், நெருப்பெரிச்சல்.
பெத்திச்செட்டிபுரம், 3வது வீதியில் கடந்த, இரண்டு மாதமாக தெருவிளக்கு எரிவதில்லை.
- வேலுசாமி, பெத்திசெட்டிபுரம்.
திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையம் ரோட்டில் தெருவிளக்கு எரிவதில்லை. இரவில், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
- செல்வராஜ், மீனாம்பாறை
சுகாதார சீர்கேடு
திருநீலகண்டபுரத்தில் குடிநீர் திறக்கப்படும் இடத்தில் அசுத்தமாகவும், சுகாதாரமற்ற நிலையிலும் உள்ளது. நோய் பரவும் அபாயம் இருப்பதால், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வராஜ், திருநீலகண்டபுரம்.
பேனரால் இடையூறு
சோளிபாளையம், பாரதி நகர் பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை இல்லாததால், பயணிகள் மரத்தடி நிழலில் நின்று வருகின்றனர். அந்த மரத்தையும் மறைத்து விளம்பர பேனரை வைத்துள்ளனர்.
- கவிராஜன், சோளிபாளையம்.
குப்பைகள் குவிந்தன
திருமுருகன்பூண்டி, துரைசாமி நகரில் செம்மொழி பூங்கா நுழைவாயில் முன், பல நாட்களாக குப்பை அகற்றப்படாமல் உள்ளது.
- கோவிந்தராஜன், திருமுருகன்பூண்டி.
கழிவுநீர் பாய்கிறது
பூலுவபட்டி - பூண்டி ரோட்டில் பாதாள சாக்கடை கழிவுநீர் ரோட்டில் சென்று வருகிறது. பாதசாரிகள் ரோட்டை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.
- தேவராஜ், பாலாஜி அவென்யூ.
மரங்கள் சாய்ப்பு
ராயபுரம், விநாயகபுரம் இரண்டாவது வீதியில், நன்கு வளர்ந்து இருந்த, நான்கு மரங்களை சிலர் வெட்டி சாய்த்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- காமராஜ், திருப்பூர்.
வாகன இடையூறு
எஸ்.ஆர். நகர் தெற்கு குடியிருப்பில் மக்களுக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டன. வாகனங்களால் காற்று மாசு ஏற்பட்டு வருகிறது.
- சுந்தரமூர்த்தி, எஸ்.ஆர். நகர் தெற்கு.
குடிநீர் வீண்
அங்கேரிபாளையம் ரோடு டீச்சர்ஸ் காலனி 3 வது வீதியில் குடிநீர் வீணாகி ரோட்டில் சென்று குளமாக தேங்கி நின்று வருகிறது.
- வாசன், டீச்சர்ஸ் காலனி.
சாயும் அபாயம்
பொங்குபாளையம், கிருஷ்ணா நகரில் மரம் பட்டு போய், விழும் நிலையில் உள்ளது. கீழே விழும் முன், அதிகாரிகள் பார்வையிட்டு அகற்ற வேண்டும்.
- நாகராஜ், பொங்குபாளையம்.
குழாய் உடைப்பு
சந்திராபுரம் பாரதி நகரில் குழாய் உடைப்பு சரி செய்யாமல், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதை சரி செய்ய வேண்டும்.
- கோகுல்ராஜ், சந்திராபுரம்.
ரியாக்ஷன்
குப்பை அகற்றம்
திருப்பூர் 58வது வார்டு பூங்கா நகரில் குப்பைகள் முழுமையாக சுத்தம் செய்து, குப்பை தொட்டி வைக்கப்பட்டது.
- மகேஷ்குமார், பூங்கா நகர்.