தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /திருப்பூர்/ காற்றில் அசைந்தாடும் கண்காணிப்பு கேமரா  

காற்றில் அசைந்தாடும் கண்காணிப்பு கேமரா  

காற்றில் அசைந்தாடும் கண்காணிப்பு கேமரா  


ADDED : ஏப் 21, 2025 11:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2025 11:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எரியாத விளக்கு

திருப்பூர், அங்கேரிபாளையம் மெயின் ரோடு, கமிஷனர் அலுவலகம் முன் டீச்சர்ஸ் காலனி மூன்றாவது வீதி வரை தெருவிளக்குகள் எரிவதில்லை. எரியாத விளக்குகளை மாற்றி புதுவிளக்கு பொருத்த வேண்டும்.

- லோகநாதன், டீச்சர்ஸ்காலனி (படம் உண்டு)

உடைந்த கேமரா

வீரபாண்டி பிரிவு சிக்னல் நால்ரோடு சந்திப்பில் உள்ள 'சிசிடிவி' கேமராக்கள் உடைந்து காற்றின் வேகத்துக்கு ஆடுகின்றன.

- செல்வராஜ், வீரபாண்டி பிரிவு. (படம் உண்டு)

சீரற்ற சாலை

கரைப்புதுார் ஊராட்சி, மீனம்பாறையில் இணைப்பு சாலை உயரமாக உள்ளது. வேகமாக வரும் வாகனங்கள் வளைவில் திரும்பும் போது தடுமாற வேண்டியுள்ளது.

- செல்வம், மீனம்பாறை. (படம் உண்டு)

புதுராமகிருஷ்ணாபுரம் - கட்டபொம்மன் நகர் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. 'பேட்ஜ்ஒர்க்' மேற்கொண்டு, சாலை சீரமைக்க வேண்டும்.

- கோவிந்தசாமி, கட்டபொம்மன் நகர். (படம் உண்டு)

அள்ளப்படாத குப்பை

அல்லாளபுரம், வேங்கடேச நகரில் தேங்கியுள்ள குப்பைகளை அள்ள வேண்டும். ரோட்டில் குவியும் குப்பைகளால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

- ராஜ், அல்லாளபுரம். (படம் உண்டு)

ஆபத்தான கம்பம்

அனுப்பர்பாளையம் புதுார் பஸ் ஸ்டாப் அருகே சிமென்ட் பூச்சு விழுந்து கம்பி தெரியும் நிலையில் ஆபத்தாக மின்கம்பம் உள்ளது.

- செல்வராஜ், அனுப்பர்பாளையம்புதுார். (படம் உண்டு)

தேங்கிய மழைநீர்

காலேஜ் ரோடு அணைப்பாளையத்தில் ரயில்வே பாலத்தின் கீழ் வழிந்தோடி வழியின்றி மழைநீர் தேங்கி நிற்பதால், வாகனஓட்டிகள் சென்று வர சிரமமாக உள்ளது.

- செல்வராஜ், அணைப்பாளையம். (படம் உண்டு)

வெளியேறாத கழிவுநீர்

திருப்பூர், 51வது வார்டு, ஆர்.வி.இ., லே- அவுட்டில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது. கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்.

- ஜீவா, ஆர்.வி.இ.,லே-அவுட். (படம் உண்டு)

அடைபட்ட கால்வாய்

கருமாரம்பாளையம், நடுநிலைப்பள்ளி எதிரில், ரேஷன் கடை முன்புறம் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளது.

- சங்கர், கருமாரம்பாளையம். (படம் உண்டு)

ரியாக் ஷன்

குழி மூடல்

திருப்பூர், அனுப்பர்பாளையம், திலகர் நகரில் கால்வாய் பணி மந்தமாக நடக்கிறது. பணி முடிந்து குழி மூடப்படவில்லை என 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. மாநகராட்சி மூலம் மண் கொட்டப்பட்டுள்ளது.

-- சர்தார் பாட்ஷா, திலகர் நகர். (படம் உண்டு)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us