ADDED : ஜூலை 17, 2025 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்
விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
- சிவகாமி, விழுப்புரம்.
தாறுமாறாக நிற்கும் வாகனங்கள்
விழுப்புரம் காமராஜர் வீதியில் சாலையோரத்தில் இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
- செந்தில், விழுப்புரம்.
பள்ளத்தால் அதிகரிக்கும் விபத்து
கோலியனுார் கூட்ரோடு-பண்ருட்டி செல்லும் சாலையோரம் பள்ளமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.
- சுவாதி, கோலியனுார்.
புதர்களால் சுகாதார சீர்கேடு
விழுப்புரம், அரசு மருத்துவமனை வளாகத்தில் செடிகள் புதர்களாக மண்டியுள்ளதால் இங்குள்ள பணியாளர்கள், நோயாளிகளுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
- கமலக்கண்ணன், காணை.