தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /விழுப்புரம்/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஜூலை 15, 2025 09:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2025 09:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உயரமான சென்டர் மீடியன்


திண்டிவனம் - சிறுவாடி செல்லும் நான்குவழி சாலையில் சென்டர் மீடியனில் வைக்கப்பட்டுள்ள கம்பிகள் உயரமாக உள்ளதால் வாகனங்கள் வருவது தெரியாமல் விபத்துக்குள்ளாகிறது.

- புருஷோத்தமன், சிறுவாடி.

வேகத்தடை இல்லாததால் அச்சம்


திண்டிவனம் அருகே வேப்பேரி அரசு மேல்நிலை பள்ளி எதிரே வேகத்தடை இல்லாததால் நான்கு வழி சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

- சிவக்குமார், வேப்பேரி.

வீணாக எரியும் தெருமின் விளக்கு


விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் உள்ள தெரு மின் விளக்குகள் பகல் நேரங்களில் வீணாக எரிகிறது.

- சந்தானம், விழுப்புரம்.

சாலையோர மணலால் விபத்து


வளவனுார் சாலையோரம் கனரக வாகனங்கள் செல்லும் போது மணல் பறப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் படிந்து விபத்து ஏற்படுகிறது.

- விவேக், வளவனுார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us