குடிபிரியர்கள் தொல்லை விழுப்புரம் கே.கே., ரோடு பழைய சுடுகாடு அருகே இரவில் குடிபிரியர்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர்.
- சினேகன், விழுப்புரம். வேகத்தடை இல்லாததால் விபத்து பிடாகம் பைபாசில் மக்கள், மாணவர்கள் சாலையைகடக்கும் இடத்தில் வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் அதிவேகமாக சென்று விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
- விக்னேஷ், பிடாகம். புகை மூட்டத்தால் அவதி விழுப்புரம் காகுப்பம் சாலையில் குப்பைகளை பகலில் எரிப்பதால் புகை மூட்டத்தில் சிக்கி பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
- சுஜாதா, விழுப்புரம். கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியில் கோலியனுாரான் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி அடைத்துள்ளதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
- கல்பனா, விழுப்புரம். வாகன ஓட்டிகள் அவதி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பேரணி, சங்கராபரணி ஆற்றுப் பாலம், தேசிய நெடுஞ்சாலையின் இருபுறத்திலும் மண் குவிந்து, வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்ப்பதால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
-தமிழ்வேந்தன், மயிலம்.