கிறிஸ்தவ, திராவிட கொள்கைகளுக்கு வித்தியாசம் கிடையாது: சொல்கிறார் உதயநிதி
கிறிஸ்தவ, திராவிட கொள்கைகளுக்கு வித்தியாசம் கிடையாது: சொல்கிறார் உதயநிதி
UPDATED : டிச 18, 2025 10:52 PM
ADDED : டிச 18, 2025 10:11 PM

மதுரை: '' கிறிஸ்தவ கொள்கைக்கும், திராவிட கொள்கைக்கும் வித்தியாசம் கிடையாது,'' என துணை முதல்வர் உதயநிதி கூறினார்.
மதுரையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது: கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் என் மீது காட்டும் தனி பிரியம் தனிப் பாசம் என்னை மிகவும் நெகிழச் செய்கிறது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வராக, திமுக இளைஞரணி செயலராக பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது.
கிறிஸ்தவ கொள்கைக்கும், திராவிட கொள்கைக்கும் வித்தியாசம் கிடையாது. இரண்டுமே எல்லா நேரத்திலும் மனிதநேயம், அன்பு, சகோதரத்துவத்தை போதிக்கின்றன. உயர்ந்த கொள்கையான இரக்கத்தை போதிப்பது கிறிஸ்தவம். அதையே திராவிடமும் கூறுகிறது. சாதாரணமானவர்கள் உழைத்தால் உயரலாம் என்பதை நிரூபித்து காட்டியது திராவிட இயக்கம். இதற்கு உதாரணம் ஈவெ ராமசாமி, அண்ணாதுரை ,கருணாநிதி.
மத்திய ஆட்சியாளர்களுக்கு தமிழகம், தமிழக மக்கள் மீது பயம் உள்ளது. எல்லா மக்களும் ஒன்று சேர்ந்துவிடுவார்களோ, நமது அதிகாரம் பறிபோய் விடுமோ என்ற பயம் உள்ளது. இதனால், ஜாதி, மதம் பெயரால் வெறுப்புணர்வை வேண்டும் என்றே பரப்புகின்றனர். எவ்வளவு முயற்சி செய்தாலம் தமிழகத்தில் பிரித்தாளும் சூழ்ச்சி வெற்றி பெறாது. இவ்வாறு உதயநிதி பேசினார்.

