ADDED : ஆக 21, 2025 07:40 AM
குடியிருப்பில் சமூகவிரோத அவலம் விழுப்புரம் மகாராஜபுரம் வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியில், பழுதடைந்த வீடுகளில் மர்ம நபர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதால் அங்குள்ள மக்கள் அச்சமடைகின்றனர்.
- சுதாகர், மகாராஜபுரம். பராமரிப்பில்லாத பூங்கா அரகண்டநல்லுார், வரதராஜன் பூங்காவில் உள்ள பேரூராட்சி பொது கழிப்பிடம் சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளது.
- கிருஷ்ண பிரதாப் சிங், அரகண்டநல்லுார். குண்டும், குழியுமான சாலை வாணியம்பாளையம், பஞ்சமாதேவி அருகே செல்லும் வி.கே.டி., நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் செல்ல அவதியடைகின்றனர்.
- விக்ரம், பஞ்சமாதேவி. விதிமுறை மீறும் பஸ்களால் நெரிசல் விழுப்புரம் ரயில் நிலையம் அருகே நிறுத்தம் இல்லாத இடத்தில் பஸ்களை நிறுத்தி டிரைவர்கள் பயணிகளை ஏற்றுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
- சந்தான கிருஷ்ணன், விழுப்புரம்.