நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மண் புழுதியால் அவதி வளவனுார் சாலையில் மண் புழுதிகள் பறப்பதால் கனரக வாகனங்களுக்கு பின் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
- சந்தோஷ், வளவனுார் வேகத்தடை இல்லாததால் விபத்து கோலியனுார் சாலை வளைவில் வேகத்தடை இல்லாததாலும், ஹாரன் அடிக்காமல் வாகனங்கள் திரும்புவதால், விபத்துகள் ஏற்படுகிறது.
- விக்கி, கோலியனுார் குண்டும், குழியுமான சாலை விழுப்புரம் - அனிச்சம்பாளையம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர்.
- கண்ணபிரான், அனிச்சம்பாளையம் கழிவுநீரால் துர்நாற்றம் விழுப்புரம், பூந்தோட்டம் சாலையில் உள்ள கோலியனுாரான் கால்வாயில் பிளாஸ்டிக் தேங்கி அடைத்துள்ளதால் கழிவுநீரால் துர்நாற்றம் வீசி வருகிறது.
- கஸ்துாரி, விழுப்புரம்.