ADDED : செப் 04, 2025 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளி மைதானத்தில் குவியும் குப்பைகள் விழுப்புரம் காமராஜர் நகராட்சி மேல்நிலை பள்ளி மைதானத்தில், குப்பைகள் கொட்டப்படுவதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
- நாகலட்சுமி, விழுப்புரம். கழிவுநீர் தேக்கம் விழுப்புரம் கே கே. ரோடு முத்துவேல் லே-அவுட் முதல் தெரு முனையில், கழிவுநீர் தேங்கியுள்ளது. இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
- வேல்முருகன், விழுப்புரம். ஜி.கரைமேடு - வி.பூதுார் சாலை பழுது கண்டமங்கலம் ஒன்றியம் ஜி. கரைமேடு முதல் வி.பூதுார் வரை சாலை பழுதடைந்துள்ளது. புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தீர்த்தமலை, மாங்குப்பம்.