/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
இருவேறு விபத்துகளில் மாணவர் உட்பட 2 பேர் பலி
/
இருவேறு விபத்துகளில் மாணவர் உட்பட 2 பேர் பலி
PUBLISHED ON : பிப் 23, 2025 12:00 AM
குடியாத்தம்,:வேலுார் மாவட்டம், திருவலம் அடுத்த சீக்கராஜபுரத்தை சேர்ந்தவர் பிரஜித், 15. இவர், காட்பாடியிலுள்ள ஒரு பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்தார். பிரஜித், அவரது நண்பர் சஞ்சய்தர்ஷன், 15, காட்பாடியிலிருந்து குடியாத்தம் நோக்கி, நேற்று 'பல்சர்' பைக்கில் சென்றனர்.
காட்பாடி அடுத்த பெரியபட்டறை அருகே எதிரே, கிளத்தான்பட்டறை வெங்கடேசன், 30, வந்த 'ஹோண்டா' பைக் இவர்கள் பைக் மீது மோதியதில், பிரஜித் பலியானார். சஞ்சய்தர்ஷன், வெங்கடேசன், படுகாயமடைந்து, வேலுார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். காட்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல், குடியாத்தம் அடுத்த எர்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுசீலா, 41, நேற்று காலை வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்றார். சாலையை கடந்தபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத பைக் மோதி காயமடைந்தார். குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

