/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
வெளிநாடு வேலைக்கு ஆட்கள் அனுப்ப உரிமம் பெற்று தருவதாக கூறி ரூ.5.26 லட்சம் மோசடி மத்தியபிரதேசத்தில் தேனி வாலிபர் கைது

PUBLISHED ON : பிப் 23, 2025 12:00 AM

தேனி:தேனியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் மனிதவள நிறுவனம் நடத்துகிறார். இவர் கனடாவிற்கு ஆட்கள் அனுப்பும் உரிமம் பெற முயற்சித்தார். இதற்காக சில இணையதளங்களில் சுய விபரங்களை பதிவிட்டார்.
இந்நிலையில் 'வாட்ஸ்ஆப்' மூலம் ஒருவர் கார்த்திகேயனை தொடர்பு கொண்டு கனடாவில் இருந்து தொடர்பு கொள்வது போல் மெசேஜ் அனுப்பினார். உரிமம் பெற்று தர குறிப்பிட்ட தொகை செலவாகும் என்றார். சில 'லிங்க்'களை அனுப்பி கார்த்திகேயனிடமிருந்து பணம் பெற்றார். இதில் ஒரு முறை மட்டும் இந்திய எண்ணில் இருந்து லிங்க் அனுப்பினார். சில நாட்களில் அனைத்து எண்ணின் வாட்ஸ்ஆப் களும் முடங்கியது. முகம் தெரியாத நபரை கார்த்திகேயனால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனால் தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் புகார் அளித்தார். சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் பணம் செலுத்திய வங்கி கணக்கு கன்னியாகுமரி, மத்தியபிரதேச மாநிலம் இந்துாரில் உள்ள வங்கி கணக்குகள் என தெரிந்தது. இந்த வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்களை ஆராய்ந்த போது இந்துாரில் உள்ள ராஜா இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை எஸ்.ஐ., தாமரைக்கண்ணன் உள்ளிட்ட போலீசார் கைது செய்தனர்.தேனி மாவட்டம் மேகமலையில் பிறந்த கேட்டரிங் பட்டதாரி ராஜா, 20 ஆண்டுகளாக இந்துாரில் வசிக்கிறார். சொந்த ஊர்க்காரரிடம் மோசடி செய்து தற்போது சிக்கியுள்ளார்.