/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கூவம் ஆற்றின் குறுக்கே இரண்டு உயர்மட்ட பாலம்
/
கூவம் ஆற்றின் குறுக்கே இரண்டு உயர்மட்ட பாலம்
PUBLISHED ON : மே 15, 2024 12:00 AM
சென்னை, சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம் 143 மற்றும் 144வது வார்டில், பூந்தமல்லி பிரதான சாலை - யூனியன் சாலையை இணைக்கும் வகையில், கூவம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்படுகிறது.
அதன்படி, உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ், சின்ன நொளம்பூர் பகுதியில், 42.71 கோடி ரூபாய் மதிப்பில், 804 அடி நீளம், 67.9 அடி அகலத்தில் அப்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
அதேபோல், பூந்தமல்லி பிரதான சாலை மற்றும் யூனியன் சாலையை இணைக்கும் வகையில், கூவம் ஆற்றின் குறுக்கே உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ், சன்னிதி முதல் குறுக்கு தெருவில், 31.65 கோடி மதிப்பில் பாலம் அமைக்கப்படுகிறது. இப்பாலம், 896 அடி நீளத்தில், 39 அடி அகலத்தில் கட்டப்படுகிறது.
தண்டையார்பேட்டை மற்றும் திரு.வி.க.,நகர் மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், கணேசபுரம் ரயில் சுரங்கப்பாதை பணி 142 கோடி ரூபாய் நிதியில் அமைக்கப்படுகிறது. 2,224 அடி நீளத்தில், 50 அடி அகலத்தில் அமைக்கப்படுகிறது.
இப்பணிகளை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை உரிய தொழில்நுட்ப வழிமுறைகளின்படி, தரமாகவும், விரைவாகவும் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, வடக்கு வட்டார துணை கமிஷனர் கட்டா ரவி தேஜா, மண்டல அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

