PUBLISHED ON : மார் 06, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில், 'ஹெல்மெட்' அணியாமல் செல்வதால், அதிகளவு விபத்து காரணமாக உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படுகிறது. திருவள்ளூர் எஸ்.பி., சீனிவாசபெருமாள் உத்தரவின்படி, ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., மேற்பார்வையில், நேற்று ஹெல்மெட் அணிந்து செல்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அண்ணாதுரை சிலை அருகே, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. மேலும், ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு லட்டு வழங்கப்பட்டது.