sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

தி.மு.க., நிர்வாகியின், ' கட்ட பஞ்சாயத்து ' கலாட்டா!

/

தி.மு.க., நிர்வாகியின், ' கட்ட பஞ்சாயத்து ' கலாட்டா!

தி.மு.க., நிர்வாகியின், ' கட்ட பஞ்சாயத்து ' கலாட்டா!

தி.மு.க., நிர்வாகியின், ' கட்ட பஞ்சாயத்து ' கலாட்டா!


PUBLISHED ON : மார் 03, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மார் 03, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''கோடை வாசஸ்தலமா, இல்ல போதை வாசஸ்தலமான்னு சந்தேகமா இருக்குதுங்க...'' என, சஸ்பென்ஸ் உடன் ஆரம்பித்தார் அந்தோணிசாமி.

''என்ன ஓய், பீடிகை பலமா இருக்கு...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

''குளுகுளு ஊட்டிக்கு சர்வதேச அளவுல சுற்றுலா பயணியர் வர்றதால, அங்க குற்றங் களும் சர்வதேச அளவுல நடக்குதுங்க...

''இந்த பகுதியில கஞ்சா போன்ற உள்ளூர் போதை வஸ்துகள் மட்டுமே பிடிபட்டு வந்த நிலையில், சமீப காலமா, 'ஹைட்ரோபோனிக், மெத்ஆம்பெட்டமைன்' போன்ற சர்வதேச போதை வஸ்துகள் சிக்கியிருக்குதுங்க...

''இது சம்பந்தமா சிலரை போலீஸ்காரங்க அரெஸ்ட் செஞ்சிருக்காங்க... 'போதையில்லா தமிழகம்'னு முதல்வர் ஒரு பக்கம் பேசிட்டு இருக்காரு... ஆனா, ஊட்டியில போதை நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் திணறு றாங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''பிறந்த நாள் கொண்டாடுன பள்ளி உதவி தலைமை ஆசிரியரை, 'ட்ரான்ஸ்பர்'ல துாக்கி அடிச்சிட்டாவ வே...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.

''அநியாயமா இருக்குதே பா...'' என்றார் அன்வர் பாய்.

''விஷயத்தை முழுசா கேளும் வே...'' என்ற அண்ணாச்சி, தொடர்ந்தார்...

''திருச்சி மணப்பாறையின் இடையப்பட்டி கிராமத்துல, அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இருக்குதுவே... இந்த பள்ளிக்கு போன மாசம், 24ம் தேதி வந்த, அ.தி.மு.க., நிர்வாகி ஒருத்தரு, மாணவ - மாணவியருக்கு ஸ்வீட் கொடுத்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாடினாராம்...

''ஸ்வீட்டோட நிறுத்தியிருந்தா பரவாயில்ல... ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் பற்றி விலாவாரியா உரை நிகழ்த்திட்டு போயிட்டாராம்... இது, சமூக வலைதளங்களில் வெளியானதும், கல்வித்துறை அதிகாரிகள் பதறிட்டாவ...

''பிறந்த நாள் கொண்டாட அனுமதி கொடுத்த பள்ளி உதவி தலைமை ஆசிரியர் அமுதாவை கருப்பூருக்கு, 'டிரான்ஸ்பர்' செஞ்சு, தங்களோட தலையை காப்பாத்திக்கிட்டாவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''கட்டப்பஞ்சாயத்து தான் முழு நேர தொழிலாம்... அரசியல், 'சைடு' தானாம் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய, தி.மு.க., நிர்வாகி ஒருத்தர், நாலஞ்சு அடிபொடிகளை வச்சுண்டு, முழு நேர கட்டப் பஞ்சாயத்துல பட்டையை கிளப்பிண்டு இருக்காராம் ஓய்...

''நிலப் பிரச்னை, பணப் பிரச்னை, காதல் கசமுசான்னு எதுவா இருந்தாலும், 'கவனிப்பு' இருக்குற பக்கத்துக்கு சாதகமா தீர்ப்பு சொல்லுவாராம்...

''நீதிமன்றமே சட்ட விரோதம்னு உத்தரவிட்ட விவகாரத்தில் கூட, 'என்னை மீறி சுப்ரீம் கோர்ட் போனா கூட ஒண்ணும் வேகாது'ன்னு வாய்சவடால் பேசுறாராம் ஓய்...

''இவர் பேச்சை கேட்காத இன்ஸ்பெக்டர் மேலயே கையை வச்சுட்டு, சில மாசம் தலைமறைவா சுத்திண்டு இருந்தாராம்...

''ஆளுங்கட்சிக்காரர் என்பதால் போலீஸ்காராளும் ஒண்ணும் செய்ய முடியாம கையை பிசைஞ்சுண்டு இருக்காளாம் ஓய்...'' என குப்பண்ணா முடிக்க, ''இந்த, குமரேசன் வாரேன்னு சொன்னாரு, ஆளை காணலியே...'' என, அண்ணாச்சி எழ, பெரியவர்கள் புறப்பட்டனர்.






      Dinamalar
      Follow us