/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
துப்புரவு பெண் பணியாளரை கொன்ற எலக்ட்ரீசியன் கைது
/
துப்புரவு பெண் பணியாளரை கொன்ற எலக்ட்ரீசியன் கைது
PUBLISHED ON : மார் 10, 2025 12:00 AM
திருப்போரூர், வண்டலுார் அடுத்த நல்லம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர், 46, இவரது மனைவி செல்வராணி, 38, இவர் மேலக்கோட்டையூர் ஐ.ஐ.ஐ.டி., கல்லுாரியில் ஒப்பந்த துாய்மை பணியாளராக வேலை செய்து வந்தார்.
செல்வராணி கடந்த 3ம் தேதி வேலைக்கு சென்றவர் பின் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து செல்வராணி கணவர் சங்கர் 4ம் தேதி தாழம்பூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராணியை தேடிவந்தனர்.
மேலும் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில், அதே கல்லுாரியில் எலக்ட்ரீசியன் வேலை செய்யும் குமரேசன், 30, என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
குமரேசன் போலீசாரிடம் கூறியுள்ளதாவது:
செல்வராணியுடன் நான்கு வருடங்களாக பழகி வந்தேன். இந்நிலையில், அதே கல்லுாரியில் பணிபுரியும் வேறு ஒருவருடன் செல்வராணி பழகினார். இதை கண்டித்தேன். சம்பவத்தன்று செல்வராணியை பைக்கில் குமிழி கிராமத்தில் உள்ள காப்பு காடு பகுதிக்கு அழைத்து சென்றேன்.
அங்கு அவரை கண்டித்தேன். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்து செல்வராணி கழுத்தை நெரித்து கொன்றேன். பின், உடலை அங்கேயே புதரில் மறைத்து விட்டு சென்றேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.
போலீசார் நேற்று முன்தினம் குமரேசன் கூறிய இடத்திற்கு சென்று அழுகிய நிலையில் இருந்த செல்வராணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். குமரேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.