/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
வெள்ளிக்கிழமை மீட்டிங்கால் நடுங்கும் வேளாண் அதிகாரிகள்!
/
வெள்ளிக்கிழமை மீட்டிங்கால் நடுங்கும் வேளாண் அதிகாரிகள்!
வெள்ளிக்கிழமை மீட்டிங்கால் நடுங்கும் வேளாண் அதிகாரிகள்!
வெள்ளிக்கிழமை மீட்டிங்கால் நடுங்கும் வேளாண் அதிகாரிகள்!
PUBLISHED ON : செப் 01, 2024 12:00 AM

''மதுரை பா.ஜ.,வுக்குள்ள ஏகப்பட்டகுளறுபடி நடக்கு வே...'' என்றபடியே வந்தார், பெரியசாமி அண்ணாச்சி.
''விளக்கமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''ஏற்கனவே, லோக்சபா தேர்தல் செலவுக்கு தலைமை தந்த பணத்தை, நிர்வாகிகளுக்கு முறையா பிரிச்சு தரலைன்னு புகார்கள் வந்துச்சுல்லா...
''சமீபத்துல, நகர நிர்வாகி ஒருத்தர், கட்சி பெயர்ல ரசீதுகள் அடிச்சு, நிதி வசூல்ல ஈடுபட்டதாக மேலிடத்துக்கு புகார் போயிருக்கு வே...
''பொருளாளரான எஸ்.ஆர்.சேகர், இது சம்பந்தமா விசாரணை நடத்த உத்தரவு போட்டிருக்காரு... கட்சி தலைமை அனுமதியில்லாம, தனியா ரசீது அடிச்ச வசூல் பண்றது, பா.ஜ.,வுல பெரிய குற்றமாம்... இதனால, மதுரை பா.ஜ.,வுக்குள்ள புயலே அடிக்கு வே...
''இந்த சூழல்ல, கட்சியில இப்ப இருக்கிற நிர்வாகிகளின் பதவிக்காலம் போன மாசமே முடிஞ்சிட்டு... லண்டன் போயிருக்கிற அண்ணாமலை திரும்பி வந்த பிறகு தான், புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, கட்சிக்கு புது ரத்தம் பாயுமாம்...
''அதுவரை, மதுரை பா.ஜ.,வுல வம்பு, தும்புகளை தவிர்க்க முடியாது வே...'' என்றார், அண்ணாச்சி.
''நுாதன முறையில வசூல் வேட்டைநடத்தறார் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''துாத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ஒரு அதிகாரி இருக்கார்... மாவட்டத்துல இருக்கற எல்லா கூட்டுறவு வங்கிகளும், இவரது கன்ட்ரோல்ல தான் வரது ஓய்...
''பக்கத்து மாவட்டத்துல குடியிருக்கற இவர், தினமும், 50 கி.மீ., அரசு வாகனத்துல பயணம் பண்ணி தான், வந்துட்டு போறார்... எந்த பைல்ல கையெழுத்து போடணும்னாலும், 'வெயிட்' எதிர்பார்க்கறார்... அதிக அளவுல நகை கடன் வழங்கப்படும் வங்கிகளில் இருக்கற, நகை மதிப்பீட்டாளர்களிடம், மாசா மாசம், 'கமிஷன்' கேக்கறார் ஓய்...
''எல்லாத்துக்கும் மேலா, ஒரு வங்கியில இருக்கற ஊழியரை பல கி.மீ., தள்ளியிருக்கற வங்கிக்கு அதிரடியா துாக்கி அடிச்சிடுவார்...
''அவர் அலறி அடிச்சுண்டு, பழைய இடத்துக்கே மாறுதல் கேட்டா, ஒரு தொகையை கறந்துட்டு, திரும்பவும் மாறுதல் போடறார்... இவரது இந்த வசூல், 'டெக்னிக்' பத்தி உயர் அதிகாரிகளுக்கும் புகார்கள் போயிருக்கு ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''வெள்ளிக்கிழமை வந்தாலே, நடுங்குறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''வேளாண்மை உற்பத்தி துறைக்கு புதுசா வந்திருக்கிற அதிகாரி, வெள்ளிதோறும், 'வீடியோ கான்பரன்ஸ்'ல அதிகாரிகளுடன் மீட்டிங் நடத்துறாருங்க... மணிக்கணக்குல பேசி, அதிகாரிகளை வறுத்து எடுக்காருங்க... சில நேரங்கள்ல, 6 - 7 மணி நேரம் கூட மீட்டிங் போகுதுங்க...
''அப்ப கீழ்மட்ட அதிகாரிகளை,'முட்டாளா நீ... மூளையே இல்லையா'ன்னு ஒருமையில திட்டி, அழாத குறையா அலற விடுறாருங்க... இத்தனைக்கும், அதிகாரி வேளாண்மை பற்றி எந்த படிப்பும் படிக்கலைங்க...
''அவரிடம், 'பாட்டு' வாங்குற அதிகாரிகள், '30 வருஷத்துக்கு மேலா பணிபுரியும் நாங்க சீக்கிரமே ரிட்டயர் ஆக போறோம்... இந்த நேரத்துல, அதிகாரிஎங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குறாரே'ன்னு புலம்புறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.